
சென்னையில், பட்டா கத்தியுடன் சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு மொட்டை அடித்தும், 15 மாணவர்களின் முடியை கத்தரித்தும் போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.
கோடை விடுமுறைக்குப் பிறகு அரசு கல்லூரிகள் நேற்று தொடங்கின. சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கல்லூரி செல்ல மாணவர்கள் தங்களை
தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கல்லூரியின் முதல் நாள் பயணத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
மாணவர்களின் இந்த ஏற்பாடு குறித்து போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல்
கல்லூரிகளுக்கிடையே ஏற்படும் மோதல் சம்பவங்களை தடுக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
பட்டா கத்தியுடன் சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். பட்டா கத்தியுடன் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் 10 பேருக்கு போலீசார் மொட்டை அடித்தும், 15 மாணவர்களின் முடியை கத்தரித்தும் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, புதுக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.