காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி.. படிக்கட்டில் உருண்டு விழுந்து உயிரிழப்பு..? போலீசார் விசாரணை

By Thanalakshmi V  |  First Published Sep 3, 2022, 12:27 PM IST

சென்னை வேப்பேரி பெண்கள் கல்லூரியில் மாடி படிக்கட்டில் நிலைதடுமாறி உருண்டு விழுந்து பலத்த காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே நடந்த இந்த சம்பவம் மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


சென்னை வேப்பேரி பகுதியை சேர்ந்த சர்மா என்பவரின் மகள் ரோஷிணி. இவருக்கு வயது 19. இவர் வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம்.மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். 

ஆனால் கல்லூரிக்கு சென்ற அவர் வகுப்பறைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அறிந்து சக தோழிகள் அவரை தேடிய நிலையில், அவர் கல்லூரியின் மாடி படிக்கட்டு அருகில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் கோவில் பணிகள்.. முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பு.. அமைச்சர் தகவல்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவரது வாயின் முன்பக்க பற்கள் உடைந்தும், தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிய நிலையிலும் இருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி காவல்துறையினர் மாணவி மரணம் விசாரித்தனர். மேலும் மாணவி ரோஷிணி படிக்கட்டில் உருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. 

மேலும் வேப்பேரி உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் கல்லூரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் மரணம் எனும் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி காயமடைந்த உடனே யாராவது பார்த்திருந்தால் அவரை காப்பாற்றிருக்கலாம் என்றும் தாமதமாகவே பார்த்ததால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க:வங்கதேசத்து பெண்ணை மணந்த தமிழ் பெண்! பாரம்பரிய முறைப்படி சென்னையில் நடந்த திருமணம்

click me!