
அடுத்த 3 மாதங்களுக்குள் மதுரை மாவட்டத்தில் பிச்சைக்காரர்களே இல்லாத நிலை உருவாக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிற்கு, குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவராவ், குடியரசுத் தலைவர் விருது வழங்கியது மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் ரூ.35 கோடி மதிப்பிலான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நடப்பாண்டில் ரூ.14 கோடியே 37 லட்சம் ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்னும் 3 மாதங்களில் மதுரை மாவட்டம் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் எனவும் இதற்கான அனைத்து முயற்சிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றியும் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.