ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த பெல் பகுதியில் உள்ள ஆர் சி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட வாரியாக நடத்த்பட்டு வருகின்றன. அந்த வகயில் ராணி பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் வளர்மதி புறாவை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியானது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கைப்பந்து, கால்பந்து, மேசைப் பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம் உள்ளிட்ட 50 வகையிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று முதல் தொடங்கப்பட்டு 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
undefined
இந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக 25 கோடி ரூபாய் அளவிற்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் போட்டிகள் நடைபெறும் இடங்களில் மருத்துவக் குழுவினர் மூலமாக முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.