
மீண்டும் நுழைந்தான் வெள்ளையன்.. கோலா நிறுவனத்தின் புதிய நறுமண பால் சென்னையில் அறிமுகம்..
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெற்றன.
மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணர்கானோர் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாகவும், பன்னாட்டுக் கம்பெனிகள் மூலம் இந்த சதி ஜல்லிக்கட்டு மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
ஜல்லிக்கட்டு காளைகளை ஒழிப்பதன் மூலம் நாட்டு மாடுகளை முற்றிலும் இல்லாமல்செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக மேலை நாடுகளில் இருந்து ஜெர்சி வகை பசுக்களை இறக்குமதி செய்து தங்களது பால் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள திட்டமிட்டு பீட்டா அமைப்பின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெர்சி பசுக்கள் மூலம் கிடைக்கும் பால், சர்க்கரை நோயை உண்டாக்கும் என்றும் இதனால் பல தீமைகள் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரடிய இளைஞர்கள் நாட்டு மாடுகளுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஏஜென்ட்டாக செயல்பட்டு வரும்பீட்டா அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பெப்சி, கோக் போன்ற பானங்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் போராட்டத்தின் போது கோரிக்கை எழுந்தது.
இளைஞர்களின் இந்த கோரிக்கையை வியாபாரிகள் ஏற்றுக் கொண்டு வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் பெப்சி, கோக் பானங்களை தங்களது கடைகளில் விற்பனை செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என போராட்டக்காரர்கள் நினைத்தார்களோ அது நடந்தேவிட்டது.
ஆம் மீண்டும் வெள்ளையன் நுழைந்து விட்டான். நம் நாட்டு மாடுகளுக்கு ஆப்பு வைக்க சென்னையில் அடியெடுத்து வைத்துள்ளது. Vio நறுமண பால்.
கோக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த . Vio நறுமண பால் நேற்று சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. நுகர்வோரை கவரும் வகையில் டப்பாக்களில் வந்துள்ள இந்த பால் லிட்டர் 125 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இத்தனை நாளும் இளைஞர்கள் போராடினார்களோ அதற்கு பங்கம் வந்து விட்டது. மீண்டும் இளைஞர்கள் போராட்டத்தை கையிலெடுப்பார்களா?