ஜாதி, மதத்தை உடைத்தெறிந்த இளைஞர் போராட்டம்… மார்க்கண்டேய கட்ஜூ பாராட்டு..

 
Published : Jan 25, 2017, 07:15 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஜாதி, மதத்தை உடைத்தெறிந்த இளைஞர் போராட்டம்… மார்க்கண்டேய கட்ஜூ பாராட்டு..

சுருக்கம்

ஜாதி, மதத்தை உடைத்தெறிந்த இளைஞர் போராட்டம்… மார்க்கண்டேய கட்ஜூ பாராட்டு..

ஜல்லிக்கட்டுக்கு  உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி சென்னை மெரீனாவில் லட்சக்கணக்கானஇளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.



இந்நிலையில்  ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. பின்னர்  தமிழக சட்டசபையின் அவசரகூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வரப்பட்டு அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம்ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக நீங்கியது.

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு தமிழகம் முழுவதும் அறவழியில் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருந்தது. மேலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச்சட்டம் இயற்றிய போது, அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இச்சட்டம் குறித்து அச்சப்பட்த் தேவையில்லை என்றும், இது நிரந்தரமானதுதான் என்றும் இளைஞர்களுக்கு சட்டரீதியிலான அறிவுரைகளையும் வழங்கினார்.

இந்நிலையில் ஜாதி, மதம் போன்றவற்றை உடைத்தெறிந்த போராட்டமாக ஜல்லிக்கட்டு இருந்தது என மார்க்கண்டேயகட்ஜூ இளைஞர்களை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக மார்க்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ள கருத்துப் பதிவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தியதமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 

ஜாதி, மதம் போன்றவற்றைஉடைத்தெறிந்த போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் இருந்தது.



ஜல்லிக்கட்டுக்கான தமிழ் மக்களின் போராட்டம் நாட்டிற்கே வழிகாட்டும் போராட்டமாக இருந்தது. ஒட்டுமொத்த இந்தியமக்களும் உங்களிடம் 

இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் முன்னெடுத்த போராட்டம் தமிழர் வாழ்க்கையைசிறப்பாக மாற்ற உதவும். தமிழ் மக்கள் வாழ்க" என்று 

வாழ்த்தியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?