மோதலை தூண்டும் வகையில் பேச்சு.!நாம் தமிழர் மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம்

By Ajmal Khan  |  First Published Apr 27, 2023, 10:55 AM IST

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்த நேரத்திலும் இடும்பாவனம் கார்த்திக் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
 


இடும்பாவனம் கார்த்திக்- வழக்கு பதிவு

நாம் தமிழர் கட்சியின்  இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், இவர் திமுக அரசின் திட்டங்களையும்,திமுகவையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிச.6 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், தேசிய ஒறுமைபாட்டிற்கு குந்தகம் விளைவிற்கும் விதமாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

கைது செய்ய போலீசார் திட்டம்

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ரேனுகா தேவி  இடும்பாவனம் கார்த்திக் மீது புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் தேசிய ஒறுமைபாட்டிற்கு குந்தகம் விளைவிற்கும் விதமாகவும், இரு பிரிவினரிடையே மோதலை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இடும்பாவனம் கார்த்திக்கை எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இடும்பாவனம் கார்த்திக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடு..! இல்லைனா பதவியை ராஜினாமா செய்.! ஸ்டாலினுக்கு எதிராக சீறும் ஆர் பி. உதயகுமார்

click me!