கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!

Published : Jun 23, 2026, 03:00 PM IST

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதலமைச்சர் விஜய் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பதிலுரை வழங்கியுள்ளார். அவரது உரை புதியதொரு அரசியல் பாதையைத் தடம் பதிப்பதாக அமைந்திருந்தது. மக்கள் ஆட்சிக்கான அடித்தளம் : நான் அப்படியே ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சரானது போல் சிலர் பேசுகின்றனர்; ஆனால், எனது வெற்றிக்கு மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் காரணம்" என்று குறிப்பிட்ட அவர், இது மன்னராட்சி இல்லை, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்று பிரகடனப்படுத்தினார். 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலிருந்தே மக்களுக்குத் துணையாக நின்றதையும், தனது திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து பேசியதையும் அவர் நினைவு கூர்ந்தார். கொள்கை மற்றும் மாநில உரிமைகள் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவக் கொள்கையோடுதான் தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்கு வந்தது என்பதைத் தெளிவுபடுத்திய முதலமைச்சர், கட்சி தொடங்கியவுடனேயே சிஏஏ (CAA) திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்ததைச் சுட்டிக்காட்டினார். அரசியல் ரீதியான கொள்கையிலும், மாநில உரிமைகளிலும் தற்போதைய அரசு சற்றும் விட்டுக்கொடுக்காது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த காலக் குறைபாடுகளும் மாற்றமும் : காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை மக்கள் சக்தியோடு உடைத்து எறிந்துள்ளோம் என்று பெருமிதம் கொண்ட அவர், கடந்த 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளைத் தற்போது அடைத்து வருவதாகக் கூறினார். முந்தைய ஆட்சியாளர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் நடந்த கொள்ளைகள் தற்போதைய ஆட்சியில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அதிரடியாகப் பேசினார்.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !