தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படை இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கோடியக்கரை கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 6 பேர் மீதும் இரும்பு பைப்புகளை கொண்டு இலங்கை கடற்படை தாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை கண்டித்து அமைச்சர் பொன்முடி அறிக்கை... அண்ணாமலை டிவிட்டரில் பதிலடி!!
இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் பாலமுருகன், அருண்குமார், மாதவன், காசி, முருகன், வேல்முருகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சர்வதேச விதிகளை அப்பட்டாக மீறும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதையும் படிங்க: திமுகவின் பி டீமாக செயல்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது... உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஈபிஎஸ் கருத்து!
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மீதான தாக்குதல் சர்வதேச விதிமீறல், மரபு மீறுதல் ஆகும். இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது. மீனவர்கள் தங்களது வாழ்வாரத்திற்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர். மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.