அட்டகாசமான வசனம்..!அப்படியே நடித்துக்காட்டிய பெரியார் பிஞ்சுகள்..உச்சி முகர்ந்து வாழ்த்திய முதலமைச்சர்..

By Thanalakshmi VFirst Published Feb 24, 2022, 5:31 PM IST
Highlights

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் தமிழக முதலமைச்சர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தான் நடித்த கதாபாத்திர காட்சிகளை சிறுவர்கள் முதலமைச்சர் முன் நடித்து காட்டினர்.
 

குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ எனும் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சமுதாய விழிப்புணர்வு குறித்து சிறுவர்கள், சிறுமிகள் நடித்துக் காட்சிய நாடகம் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பெரியார் வேடமிட்டு அந்த நாடகத்தில் நடித்திருந்த சிறுவர், பெண் விடுதலை, பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? மததத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய காட்சிகள் மக்களை கவரும் விதத்தில் இருந்தது.குறிப்பாக,பெரியாரின் வேடமணிந்திருந்த சிறுவன், “கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமா நடத்தனும்ங்கிறது மட்டும் தான் என்னோட எண்ணம்”போன்ற வசனங்களையும், பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்து பேசியிருந்தனர்.

இந்நிலையில் தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன்- குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் தமிழக முதலமைச்சர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து,அவர்களுக்கு திருவள்ளூவர் சிலை, புத்தகங்களை பரிசாக வழங்கினார்.நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர் தங்களது கதாபாத்திரங்களை நடித்துகாட்ட அதை கண்டு ரசித்து வெகுமாக பாராட்டினார். பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்க கூடாது, சாதி, மதங்களை பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று பெரியார் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் வசனங்கள் ஆழமாக இருந்தன. 

மேலும் குறவன் - குறத்தி நாடகத்தில் நடித்த சிறுமி, சொந்த நாட்டிலே நாங்கள் அகதிகளாக இருப்பதாகவும் எங்களுக்கென்று ரேஷன், ஆதார் போன்று எந்த ஆவணங்களும் கிடையாது என்று வேதனையுடன் தெரிவிக்கும் காட்சிகள் நன்றாக இருந்தது. தன் முன் நடித்த காட்டிய சிறுமி, சிறுவர்கள் கதாப்பாத்திரங்களை கண்டு ரசித்த முதலமைச்சர் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,தந்‌ைத பெரியார்‌ பெயரல்ல; கருத்தியல்‌,தலைமுறைகள்‌ கடந்து மானுடச்‌ சமுதாயம்‌ பகுத்தறிவோடும்‌ சுயமரியாதையோடும்‌ வாழ்வதற்கான வழிகாட்டி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கொள்கை உரத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்‌ பங்கெடுக்கும்‌ பெரியார்‌ பிஞ்சுகளை வாழ்த்தி மகிழ்ந்தேன்‌. இது பெரியார்‌ மண்‌! கலைக்கு இடமுண்டு; களைகளுக்கு அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

தந்தை பெரியார் பெயரல்ல; கருத்தியல்!

தலைமுறைகள் கடந்து மானுடச் சமுதாயம் பகுத்தறிவோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கான வழிகாட்டி!

கொள்கை உரத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தி மகிழ்ந்தேன்.

இது ! கலைக்கு இடமுண்டு; களைகளுக்கு அல்ல. pic.twitter.com/on24VDLBoS

— M.K.Stalin (@mkstalin)

முன்னதாக புலிகேசி என்ற தலைப்பில் நடத்திய நாடகத்தில், பிரதமரை விமர்சித்ததாக கூறி சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அந்த தனியார் தொலைக்காட்சிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதுமட்டுமல்லாது, மத்திய தகவல் தொழில்நுட்ப துறையிடம் புகார் அளித்து தொலைக்காட்சிக்கு நோட்டீஸூம் அனுப்பப்பட்டது குறிப்பிடப்பட்டது.

click me!