சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 178 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டும் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் சென்னையில் 200 வார்டுகளிலும் போட்டியிட்ட அதிமுக வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 2வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பிடித்துள்ளது. வழக்கமாக மாநகராட்சிகளில் 2வது பெரிய கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படுவது வழக்கம்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மரண அடி வாங்கியுள்ளது. சென்னை, கோவை, திருச்சியில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோவை, திருச்சி மாநகராட்சியில் எதிர்கட்சி அந்தஸ்தில் அமரப்போகிறது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 178 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டும் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் சென்னையில் 200 வார்டுகளிலும் போட்டியிட்ட அதிமுக வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 2வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பிடித்துள்ளது. வழக்கமாக மாநகராட்சிகளில் 2வது பெரிய கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படுவது வழக்கம்.
undefined
ஆனால், தற்போதுள்ள, சூழ்நிலையில் மொத்த முள்ள 200 வார்டுகளில் 10 சதவீதம் இடங்களை கூட பிடிக்காமல் 7.5 சதவீத இடங்களில் அதாவது 15 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 10 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். அதே நடைமுறையை மாநகராட்சியிலும் பின் பற்றினால், அதிமுக 10 சதவீதத்துக்கும் குறை வான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல், கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. அதில் திமுக கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் மட்டும் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் அதிமுக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிமுகவால் எதிர்க்கட்சி அந்தஸ்து மட்டுமல்ல 2வது இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
திருச்சியில் 65 வார்டுகள் உள்ளன. அதில் திமுக கூட்டணி 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரசை விட அதிமுக குறைவான இடங்களை பிடித்துள்ளதால், இங்கும் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்ற நிலையில், கோவை, திருச்சியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.