தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவிய 35க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ம் தேதி ஒமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசி இதனை கட்டுப்படுத்தாது எனவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
undefined
இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஒமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவிய 35க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியான தஞ்சை நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஓமைக்ரான் கொரோனா பரவிய நிலையில் தஞ்சை நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. பரிசோதனைக்கு பிறகு அவருக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும். கொரோனா உறுதியான நபருக்கு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.