MK Stalin : மீன்கள், காய்கறிகள், பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தும் ரசாயன பொருட்கள், பூச்சுக்கொல்லி மருந்துகளினாலும், பால் பதனிடப்பயன்படுத்தும் பொருட்களாலும் புற்றுநோய் அதிகமாக பரவுவதாக தகவல்கள் வருகின்றன.
பாஜக MLA எம்.ஆர் காந்தி
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு.. சொந்த தொகுதியிலேயே எடுபடாத ஓபிஎஸ்..! எடப்பாடிக்கு எதிராக 7 நிமிடத்தில் முடிந்த போராட்டம்
இதற்கு இயற்யாகவே க கடற்கரையோர மணலில் வெளிப்படும் கதிர்வீச்சு ஒரு காரணம் என ஆய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் மீன்கள், காய்கறிகள், பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தும் ரசாயன பொருட்கள், பூச்சுக்கொல்லி மருந்துகளினாலும், பால் பதனிடப்பயன்படுத்தும் பொருட்களாலும் புற்றுநோய் அதிகமாக பரவுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே ஒரு வல்லுனர் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து புற்றுநோய்க்கான காரணங்களை கண்டு பிடித்து அதனை தடுக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு.. கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
புற்றுநோய் மையம்
மேலும் , குமரி , நெல்லை , தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களை சேர்ந்த புற்று நோயாளிகள் முதல் - அமைச்சர் காப்பீடு திட்டத்தில் குறைந்த செல்வில் கதிரியக்க சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மையம் உள்பட அனைத்து மத்திய மாநில அரசு உதவி பெரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின்
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு முதல் அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் சிகிச்சை அளிக்க மறுக்கப்படுவதால் நோயாளிகள் பெறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே காப்பீட்டு திட்டத்தின் மூலம் தடையின்றி சிகிச்சை பெற அங்கு நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக தகவல் மையத்தை மீண்டும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.. !