இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு துணை நிற்கும்..! உணவு, மருந்து ரெடி..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published : Nov 30, 2025, 02:36 PM IST
Tamilnadu

சுருக்கம்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மூலம் மருந்து, உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் உருவான டிட்வா புயல் இலங்கையை மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் விடாமல் கொட்டித் தீர்த்த கனழமையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் 150க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கைக்கு இந்தியா உதவி

200க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். 20,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 2.19 லட்சம் பேர் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கனமழை வெள்ளப்பெருக்கால் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய இலங்கைக்கு முதல் நாடாக இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதாவது ஆபரேசன் சாகர்பந்து என்ற பெயரில் இந்தியா இலங்கைக்கு ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலமும் விமானப்படை மூலமாகவும் உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு துணை நிற்கும்

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ''டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.

தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்

இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11:05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள் -113, பெண்கள் - 60, குழந்தைகள் - 4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்துவரப்பட்டுள்ளனர்.

உணவு, மருந்து ரெடி

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்