அடுத்த மாதம் துபாய் செல்கிறார் மு.க.ஸ்டாலின்... முதல்வரான பின் முதல் வெளிநாட்டு பயணம்!!

Published : Feb 21, 2022, 04:57 PM IST
அடுத்த மாதம் துபாய் செல்கிறார் மு.க.ஸ்டாலின்... முதல்வரான பின் முதல் வெளிநாட்டு பயணம்!!

சுருக்கம்

192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் செல்கிறார். 

192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் செல்கிறார். இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது. தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். துபையில் மார்ச் மாதம் 192 நாடுகள் சார்பாக மாபெரும் கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கான தொழில் முதலீட்டை ஈர்க்கும்பொருட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். கண்காட்சியில் தமிழகம் சார்பிலும் ஒரு அரங்கு அமைக்கப்படும் என்றும் அதில், கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் அந்த அரங்கம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!