டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள்... ஆதரவு தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

By Narendran S  |  First Published May 1, 2023, 6:54 PM IST

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். 


டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் டெல்லியில் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை தொடங்கினர்.

இதையும் படிங்க: எங்களது உறவை யாராலும் அழிக்க முடியாது... யாரை பற்றி கூறுகிறார் அமைச்சர் உதயநிதி!!

Latest Videos

இதனிடையே குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் டெல்லியில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோமாளி அரசாக செயல்படுகிறது திமுக அரசு... சி.வி.சண்முகம் ஆவேசம்!!

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று திமுக சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம் என்று குறிப்பிட்டுள்ளார். 

It is heartbreaking to see Indian Wrestlers who brought honour to India, are forced to protest, for safeguarding self respect in face of sexual harassment.

Today, on behalf of DMK, Thiru. MP, met them and expressed our solidarity. We will stand by our wrestlers…

— M.K.Stalin (@mkstalin)
click me!