
மும்மொழிக் கொள்கை நாகை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. என்.கௌதமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்து பேசிய அவர், இன்றைக்கு நாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தி, கொண்டு வந்து விட வேண்டும் என்று இன்றைக்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல், தொகுதி மறுசீரமைப்பையும் கொண்டு வந்து, எப்படியாவது தமிழ்நாட்டின் உரிமையை - எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.
பாஜக அண்ணாமலை வழி தான் என் வழி.! திமுகவிற்கு டாட்டா காட்டிய ஜி.கே.வாசன்
அனைத்துக்கட்சி கூட்டம்
அதனால்தான் வருகிற 5 ஆம் தேதி நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் 40 கட்சிகள் - யார் யார் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ, அந்த 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் வருவதாக நமக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலர், நாங்கள் வர வாய்ப்பில்லை; வர முடியாது என்றும் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, வர இயலாது; வர முடியாது என்று சொல்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அரசியலாக பார்க்காதீங்க
ஏதோ தனிப்பட்ட தி.மு.க.விற்கோ, தனிப்பட்ட உங்களுக்கோ உள்ள பிரச்சினை இல்லை இது. தனிப்பட்ட கட்சிக்கு அல்ல இது. இதை அரசியலாக நீங்கள் பார்க்காதீர்கள். நம்முடைய உரிமை - நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை. இன்றைக்கு 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களை வைத்துக் கொண்டே போராடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், அதையும் மீறி இன்றைக்கு இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான், நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் நிச்சயமாக நிறைவேற்ற முடியும். எனவே, அதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக அறிவிப்பு! அண்ணாமலை அடுக்கும் காரணம்!
கௌரவம் பார்க்காதீர்கள்
நான் மீண்டும் இந்தத் திருமண விழாவின் மூலமாக அனைத்துக் கட்சிகளையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வர முடியாது என்று கூறியவர்களும் தயவு கூர்ந்து வர வேண்டும்... வர வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் அழைப்பு விடுக்கிறேன். இதில் கௌரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது, நாம் என்ன செல்வது என்று நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டின் பிரச்சினை. அதைச் சிந்தித்துப் பார்த்து, நீங்கள் வர வேண்டும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கிறேன்.
மணமக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்பது, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் - நம்முடைய தமிழ்மொழிக்குச் செம்மொழி என்கிற தகுதியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். எனவே, பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட செம்மொழியில் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்ற அன்பான வேண்டுகோளை வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.