மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்... கொரோனாவை காட்டி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

Published : Mar 22, 2022, 03:59 PM IST
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்... கொரோனாவை காட்டி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

சுருக்கம்

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கோரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது கொரோனா தொற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா இறப்புகளைத் தவிர்ப்பதற்கு தடுப்பூசியே அடிப்படை என்பதனைக் கருதி, மாவட்ட வாரியாக தடுப்பு ஊசி போட தகுதியானவர்களில், தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் சில கண்காணிப்பு நடவடிக்கைகளையும் வழங்கினார். அதன்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பு ஊசி போடாத சுமார் 50 இலட்சம் நபர்கள் மற்றும் 2ஆம் தவணை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட கூடிய மெகா தடுப்பு ஊசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல் தவனை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி மெகா தடுப்பு ஊசி முகாம்கள் மூலம் தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பு ஊசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கௌரவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகள் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும். பொது சுகாதார வல்லுநர்கள் ஏற்கனவே அளித்துள்ள வழிமுறைகளின்படி, மாதிரிகள், மரபியல் சோதனைகளில் தற்போதைய கண்காணிப்பை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பொது சுகாதார வல்லுநர்கள் கூறிய வழிமுறைகளான கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 08 December 2025: 3500 ஆண்டுகள் பழமை.. காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்