'3 மாதத்துக்கு உஷார இருங்க..' கொரோனா 4ம் அலை குறித்து.. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

By Raghupati R  |  First Published Mar 22, 2022, 1:47 PM IST

அருகே இருக்கும் மாநிலங்கள், நாடுகளில் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி :

சென்னை ஜாபர்கான்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கம் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழகத்தில் 4 ஆம் அலை வருமா வராதா என்று தெரியவில்லை. ஆனால் தேவையான நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் 22 மாவட்டத்தில் கொரொனா பாதிப்பு  பூஜ்ஜியமாக உள்ளது. 

Latest Videos

undefined

அதேபோல கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் பூஜ்ஜியமாக உள்ளது.  பொது மக்கள் தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும், அருகே இருக்கும் மாநிலங்கள், நாடுகளில் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

முதல்வர் ஆலோசனை :

தமிழகத்தில் மொத்தமாக 12-14 வயதுடைவர்கள் 21.21 லட்சம் பேர் உள்ள நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6,29,100 (29.66%) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல, 15-18 வயதுடையவர்களில் 28.37 லட்சம் பேருக்கு  (84.81%) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஆம் அலை வருமா வராதா என்று தெரியவில்லை. ஆனால் தேவையான நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு எடுத்து வருகிறது .

1.32 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் குறித்து முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

click me!