பள்ளி, கல்லூரிகள் குறித்து முக்கிய முடிவு.. ஊரடங்கில் என்னென்ன கட்டுபாடுகள்..? நாளை முதல்வர் ஆலோசனை..

Published : Dec 30, 2021, 04:12 PM IST
பள்ளி, கல்லூரிகள் குறித்து முக்கிய முடிவு.. ஊரடங்கில் என்னென்ன கட்டுபாடுகள்..? நாளை முதல்வர் ஆலோசனை..

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ளதால் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்கலாமா, என்னென்ன புதிய கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் கூட்டத்தில் பள்ளி , கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகளை சில மாதங்களுக்கு தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில், பள்ளி,  கல்லூரிகளுக்கு சுழற்சி முறையிலான வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது எனவும் திடீரென நோய்தொற்று உயர்ந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இவை தொடர்பாகவும் நாளைய ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதனும் பங்கு கொள்வார் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது உருமாறிய கொரொனா வைரஸ் ஒமைக்ரான் மற்றும் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தமிழத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சுட்டிகாட்டி கடிதமும் எழுதியுள்ளது. இதனிடையே ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுழற்சிமுறை வகுப்புகளை சில மாதங்களுக்கு தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்-லைன் வழி வகுப்புகளை நடத்த வேண்டும் என்கிற  கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் , ஆன்-லைன் வழியில் வகுப்புகளை நடத்துவது,  தேர்வை நடத்துவது குறித்து பரீசிலிக்க வேண்டும் என அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றினால் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 10 நாட்களில் தினமும் அதிகரித்து வண்ணம் உள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு 125 ஆக இருந்த நிலையில் நேற்று தொற்று எண்ணிக்கை 294 ஆக் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் அலட்சியப்படுத்துவதே ஒமைக்ரான் பரவலுக்குக் காரணம் என்றும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!