Sahitya Akademi Award : 2021ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது… சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிப்பு!!

Published : Dec 30, 2021, 04:02 PM IST
Sahitya Akademi Award : 2021ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது… சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிப்பு!!

சுருக்கம்

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. 

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பிற்குரிய விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. சாகித்ய  அகாடமி விருது எழுத்தாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உயரிய விருதாக காணப்படுகிறது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

அம்பை என்கிற சி.எஸ். லக்சுமி தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவர், பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளை எழுதுவதில் முன்னோடியாக திகழ்பவர். பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக இவர் தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர் இவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

இந்த நிலையில் சிறுகதை எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லட்சுமி) 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது வழங்கப்பட உள்ளன. இவர் எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயன்படாத பாதைகள் போன்ற பல புத்தகங்களை எழுத்தாளர் அம்பை எழுதியுள்ளார். இத்தகைய உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வாசிப்பு குறைந்துள்ளது என்பதைத் தாண்டி வாசிப்பு முறை மாறியுள்ளது என்றும் எழுத்தாளர் அம்பை தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!