
தேனி
தேனியில் காளை கன்றுகளுக்கு சல்லிக்கட்டுக்கான பயிற்சிகளை இளைஞர்கள் அளித்தனர்.
தேனி மாவட்டத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வராயன்பட்டி, அய்யம்பட்டி ஆகிய இடங்களில் சல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
இதில் கலந்து கொள்ளும் விதமாக மாவட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சல்லிக்கட்டுக் காளைகள் தயார்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் 3 வயது முதல் 6 வயதுக்கு உள்பட்ட காளை கன்றுகளுக்கு சல்லிக்கட்டு விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அல்லிநகரத்தில் வாடிவாசல் மற்றும் சல்லிக்கட்டு திடல் அமைத்து நடைபெற்ற பயிற்சியில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் 17 காளை கன்றுகள் கொண்டுவரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
சல்லிக்கட்டு விளையாட்டில் அனுபவமுள்ள இளைஞர்கள் காளைக் கன்றுகளுக்கு பயிற்சி அளித்தனர். ஆறு
வயதிற்கு மேற்பட்ட பருவத்தில், சல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக காளைக் கன்றுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது என்று சல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேனியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.