“சோலா பூரியில் புழு.. சென்னை வி.ஆர் மாலில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்”

By Raghupati R  |  First Published Aug 16, 2022, 7:48 PM IST

சென்னை வசந்த பவனில் பரிமாறப்பட்ட சோலா பூரியில் புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள வீ.ஆர் மால் மூன்றாவது தளம் முழுவதுமாக உணவு கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வசந்த பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அசோக் நகரை சேர்ந்த ராணி, நேற்று மாலை ‘நம்ம வித்யா வசந்த பவன்’ உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளனர். அவரது மகன் கேட்டபடி, சோலா பூரி ஆர்டர் செய்திருக்கிறார். ஆர்டர் செய்த சோலா பூரி வந்தவுடன், சாப்பிட தொடங்க அதில் புழு இருந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு..“ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். உணவுக் கூடத்தைப் பார்க்குமாறு உணவக உரிமையாளரிடம் கூறினார். கேன்டீன் உள்ளே சென்று பார்த்தபோது, ​​சோலா பூரி தயாரிக்க பயன்படுத்திய மாவில், ஐந்துக்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தார் ராணி. அதன்படி அங்குவந்த  உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அதிரடிதாக ஆய்வு நடத்தினர். 

மேலும் செய்திகளுக்கு..“என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக்

சமையல் கூடத்தில் மூட்டையில் இருந்த மாவை, சல்லடை போட்டு சளித்து எடுத்ததில் உயிருடன் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர். சமையல் கூடம் மட்டுமல்லாமல் உணவகத்தை நடத்த தற்காலிக தடை விதித்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, உணவக உரிமை வைத்திருக்கும் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

click me!