ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்! உள்துறைச் செயலாளர் அதிரடி! என்ன காரணம் தெரியுமா?

Published : Jun 17, 2025, 11:15 AM IST
adgp jayaram

சுருக்கம்

இன்ஸ்டாகிராம் காதல் திருமணம் கடத்தல் வழக்கில் சிக்கியது. எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் நான் காடு பகுதியில் வசித்து வருபவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் போனில் பேசி வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய உள்ளது. இதனை அறிந்த விஜயா ஸ்ரீயின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். 

சிறுவன் கடத்தல்

இதனைத் தொடர்ந்து விஜயா ஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து விஜயா ஸ்ரீயின் பெற்றோர் உறவினர்களிடம் விசாரித்த போது தனுஷ் உடன் விஜயா ஸ்ரீ கடந்த மே மாதம் 15ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகியது தெரியவந்தது. இதனையத்து திருவாலங்காட்டில் உள்ள களப்பாக்கத்தில் தனுஷின் வீட்டிற்கு சென்ற விஜயஸ்ரீயின் உறவினர்கள் தனுஷின் தம்பி இந்திரஜுத் என்பவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தனுஷின் தாய் காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் கொடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இது தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயாஸ்ரீ என் தாய் வனராஜா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த கடத்தல் சம்பவத்திற்கு புரட்சி பாரதம் கட்சியை தலைவரும், எம்எல்ஏவமான பூவை ஜெகன்மூர்த்தி ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில் முன் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார். தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏடிஜிபி ஜெயராமன் கைது

மேலும் கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி ஜெயராமனின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே, இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக முறையிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி- ஜெயராமனுக்கும் உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிமன்றத்தில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார். இதையடுத்து, இந்த வழக்கில், ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.

பணியிடை நீக்கம்

குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும். இந்நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள கூடிய சூழ்நிலையில் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்ய உயர்நிதிமன்றத்தில் உத்தரவிட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!