தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.! எரிசக்தி துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்

Published : Jun 19, 2023, 03:35 PM ISTUpdated : Jun 19, 2023, 04:12 PM IST
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.! எரிசக்தி துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்

சுருக்கம்

நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராகவும்,  எரிசக்தித்துறை செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நிர்வாக வசதிக்காக அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல

இறையன்பு உத்தரவு

பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராகவும்,  எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக 12 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் மழை தொடருமா.? எந்த எந்த பகுதிகளில் கன மழை பெய்யும்- வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்