மகளிர் உரிமைத்தொகை திட்டம்
மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்த இருப்பதாகவும், இந்த திட்டத்தில் இரண்டு கோடி பேர் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது. இந்த திட்டத்தில் யார் யார் பயன்பெறலாம் என்ற நிபந்தனைகளும் வெளியிடப்பட்டது. குறிப்பாக அரசின் மற்ற திட்டங்களில் பயன் பெறாதவர்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டது. முதியோர் ஓய்வூதியம், விதவைக்கான உதவி தொகை பெறுபவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற முடியாது என கூறப்பட்டது. அடுத்ததாக ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களும் இந்த திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
சிறப்பு முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர்
இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், விண்ப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டம் தொப்பூரில் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றும் பணி தொடங்குகிறது.
இதையும் படியுங்கள்
கருணாநிதி, கனிமொழி தொடர்பாக அவதூறு பேச்சு..! பாஜக மாவட்ட தலைவரை தட்டி தூக்கிய போலீஸ்