வேலை தேடி குவைத் சென்றவர்கள் குடியிருந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்களா என்பதை அறிந்து கொள்ள தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குவைத் தீ விபத்து- 40 பேர் பலி
தெற்கு குவைத்தை அடுத்த மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிழைப்புக்காக குடும்பங்களை விட்டு சென்ற இந்தியாவை சேர்ந்த 40 பேர் மூச்சு திணறியும், தீயில் கருகியும் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்…
தமிழர்கள் பாதிப்பா.?
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:
இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901