அழகிரியின் மகன் துரை தயாநிதி.. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி - முழு விவரம்!

Durai Dayanidhi : முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அண்ணன் மகன் துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chief Minister Stalin Elder Brother Alagiri son Durai Dayanidhi admitted in hospital ans

முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி அவர்களுடைய மகன் தான் துரை தயாநிதி. கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் முதலில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக அவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் அழகிரி அவர்களுடைய மகன் துரை தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டிலிருந்து உடனடியாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

Latest Videos

கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை..! விரைவில் உறுதியான கூட்டணி அமையும்- ஜெயக்குமார்

அங்கு அவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் பொது பிரிவிற்கு மாற்றப்பட்டார். அவருடைய உடல் நலம் குறித்து தொடர்ச்சியாக மு.க ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

சுமார் மூன்று மாத காலமாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் இன்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இப்பொது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்

click me!