சிறந்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் கோப்பை! தொடர்ந்து 3வது முறை வென்ற போலீஸ் ஸ்டேஷன்!

By SG Balan  |  First Published Jul 22, 2024, 9:22 PM IST

தமிழ்நாடு அரசின் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பையை சிவகாஞ்சி காவல் நிலையம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.


தமிழ்நாடு காவல்துறையில் சிறந்த காவல் நிலையத்திற்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவகாஞ்சி காவல் நிலையம் இந்தக் கோப்பையைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Tap to resize

Latest Videos

தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்! நம்ம தமிழ் மொழி எந்த இடம் தெரியுமா?

மேற்கண்ட உத்திரவின் படி ஒரு குழு அமைக்கப்பட்டு, காவல் நிலையங்களில் திறன்மேம்பாடு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு அளவிடுகளின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு தரவரிசைப்படுத்தி குடியரசு தினத்தன்று அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற 1) மதுரை மாநகர், C3 எஸ் எஸ் காலணி காவல் நிலையம் 2) நாமக்கல் மாவட்டம், நாமக்கல் காவல் நிலையம் 3) திருநெல்வேலி மாநகர், பாளையம்கோட்டை காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோப்பைகள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்சியாக மாவட்டம்/ மாநகரங்கள் தோறும் காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு மாவட்ட/ மாநகர அளவில் முதல் இடம் பிடிக்கும் காவல் நிலையங்களுக்கு கோப்பைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்/ படைத்தலைவர் அவர்கள் இன்று (22-07-2024) வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் முதல் இடம் பிடித்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்கள்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையம் தொடர்ந்து மூன்று முறை மாவட்டத்தில் முதலிடம் பிடித்து கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது" இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாப்கான் மூளை தெரியுமா? எப்போதும் ஸ்கிரீன் பார்த்துட்டே இருக்குறவங்க இதை தெரிஞ்சுகோங்க!!

கோப்பை வென்ற காவல் நிலையங்கள்:

1) திருவள்ளூர் மாவட்டம், திருத்தனி காவல் நிலையம்

2) திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம்

3) திருப்பத்துர் மாவட்டம், திருப்பத்தூர் நகர காவல் நிலையம்

4) ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை காவல் நிலையம்

5) வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையம் 6) கடலூர் மாவட்டம், திருப்பாபுளியூர் காவல் நிலையம்

7) விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்

8) செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகர காவல் நிலையம்

9) காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையம்

10) கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர் கோட்டை காவல் நிலையம்

16 வயசு ஆகிருச்சா? மாதம் ரூ.3,000 வருமானம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் சேருங்க!

click me!