கோவை கார் வெடிப்பு விபத்து..! தேசிய புலனாய்வுக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

By Ajmal Khan  |  First Published Oct 26, 2022, 2:59 PM IST

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட பரிந்துரை செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


கோவை கார் வெடி விபத்து தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் உள்ளிட்ட காவல்துறை மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக தமிழக அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும். பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெடி பொருள் என்று தெரிந்தே உதவி செய்துள்ளனர்..! 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது- காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

Tap to resize

Latest Videos

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மேலும், கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும், மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிட உத்தரவிட்டார்.

திமுக ஆட்சியின் ஒன்றரை ஆண்டுகள்.! பூஜ்யமாக காட்சியளிக்கும் தமிழகம்.! மு.க.ஸ்டாலினை சீண்டிய ஆர்.பி.உதயகுமார்

மேலும் கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடி விபத்து..! காவல்துறை அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை

click me!