கோவை கார் வெடி விபத்து தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
கோவை கார் வெடி விபத்து
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது. விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட விசாரணையில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
5 பேர் உபா சட்டத்தில் கைது
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் டி ஐ ஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையில் குழுவினர் கோவையில் பிற்பகலில் விசாரணையை துவக்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற நினைப்பதா.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி
முதலமைச்சர் அவசர ஆலோசனை
இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் உள்ளிட்ட காவல்துறை மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கார் வெடி விபத்தின் போது நடைபெற்றது என்ன..? கோவையில் நடைபெற்ற சோதனையில் சிக்கியது என்ன..? தமிழகத்தில் குண்டு வெடிக்க தீவிரவாதிகள் திட்டமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோவை கார் வெடி விபத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
கோவை கார் வெடி விபத்து.! பொது வெளியில் கவனமுடன் கருத்து கூற வேண்டும்.! பாஜகவிற்கு சசிகலா அறிவுரை