மாலத்தீவு கடற்படை செய்த கொடூர செயல்.. உடனே மீனவர்களை ரிலீஸ் பண்ணுங்க - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது.

Latest Videos

இருப்பினும், மீனவர்கள் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த சூழலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் 23-10-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு தலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம்… pic.twitter.com/D8fDI3AF4P

— CMOTamilNadu (@CMOTamilnadu)

உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா?

click me!