நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. டாக்டர் உள்பட பல ஆண்களை நைசாக ஏமாற்றிய பெண் - சென்னை போலீஸ் வலைவீச்சு!

By Ansgar R  |  First Published Aug 3, 2023, 7:51 PM IST

"நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்", என்று கூறி ஒரு டாக்டர், ஒரு தொழிலதிபர் என்பர் பல ஆண்களை ஆசை காட்டி மோசடி செய்துள்ள மஞ்சுளா என்ற பெண்ணின் வழக்கு தற்பொழுது சென்னை போலீசாருக்கு மாபெரும் தலைவலியாக மாறி உள்ளது.


பிரபல நாளிதழ் ஒன்று அளித்த தகவலின்படி, பெண் ஒருவர் மருத்துவர், ஒரு தொழிலதிபர், ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் தலைவர் உட்பட பல ஆண்களை ஏமாற்றியுள்ளார் என்று கூறியுள்ளது. அந்த பெண்ணுக்கு எதிராக மூன்று காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

தற்போது இந்த வழக்கை சென்னை நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்ற சென்னை மாநகர காவல் ஆணையர், துணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மஞ்சுளா என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு 40 வயது ஆகிறது என்றும், அவர் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்ட டெலிவரி பாய் ஊழியர்.. ஐயோ என்ன தவிக்க விட்டு போயிட்டீங்களே கதறும் மனைவி.!

ஏற்கனவே மயிலாப்பூர் பகுதியில் திருமணமாகி வசித்து வந்த மஞ்சுளா குறித்து, சதீஷ்குமார் என்ற தொழிலதிபர் புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண் மயிலாப்பூரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், சமூக வலைதளத்தில் தன்னுடன் நட்பு கொண்டதாகவும் சதீஷ்குமார் கூறியுள்ளார். 

ஒருகட்டத்தில் தனக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் சேட் செய்ய தொடங்கினார் என்றும் அந்த தொழிலதிபர் கூறியுள்ளார். முதலில் மஞ்சுளா தனது புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அவருக்கு அனுப்பியதாக கூறிய சதீஸ்குமார், ஒருகட்டத்தில் சதீஷ்குமாரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அவரை குறித்து அவதூறு பரப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். 

மஞ்சுளாவை குறித்து இதேபோல மூன்று வெவ்வேறு இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சுளாவின் கணவரும் அவரது மக்களுமே, மஞ்சுளா மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இணைந்தால் அதிமுகவின் நிலை என்ன.? ஜெயக்குமார் அதிரடி பதில்

click me!