
கடல் மட்ட உயர்வினால் சென்னையே கடலில் மூழ்கும் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். சென்னை பகுதியில் கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து அவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
கடல் மட்டம் உயர்வினால் தமிழகத்தில் 3551 சதுர கி.மீ. கடற்கரைப் பகுதி பாதிக்கப் படக் கூடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2012ஆம் ஆண்டின் மறைந்திருந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கடற்கரை பகுதி திட்டத்தில் நீண்ட கால குடியிருப்பு திட்டமும், கடல் மட்டம் உயர்வை கணக்கில் எடுக்கும் அபாயக் கோடும் இருக்க வேண்டும் என்று கூறினர் மீனவர் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களான அகமதாபாத்தைச் சேர்ந்த CEPT University நகர வடிவமைப்பு வல்லுநர் பேரா ஆ. ஸ்ரீவத்ஸன், கா. சரவணன் ( ஊரூர் குப்பம் மீனவ கூட்டுறவு சங்கம்), பூஜா குமார் (கடற்கரை வள மையம்) மற்றும் நித்யானந்த் ஜெயராமன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
கடற்கரை வள மையத்தின் பூஜாகுமார் கூறியபோது, காஞ்சிபுரம் செய்யூர் அனல் மின் நிலையமும் மூழ்கும்... சென்னையை பொறுத்தவரை மணலி, எண்ணூர் அனல் மின் நிலையங்கள், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு உள்ளிட்டவை கடல்நீர் மட்ட உயர்வின் காரணமாக நீரில் மூழ்கும் என்று இந்திய விண்வெளி மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றார்.
CRZ திட்டம் தொடர்பான விளக்கத்தை அளித்த பூஜா குமார், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை மறைக்கப்பட்டுள்ளது ; வெளிவரவில்லை என்று குறிப்பிட்டு, அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் 2000 கிமீக்கும் அதிகமான நிலங்கள் கடல்மட்டம் உயர்வின் காரணமாக பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும். தேசிய நெடுஞ்சாலைகளும் மூழ்கடிக்கப்படும் அபாயம் உள்ளதுசென்னையை பொறுத்தவரை மணலி, எண்ணூர் அனல் மின் நிலையங்கள், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு உள்ளிட்டவை கடல்நீர் மட்ட உயர்வின் காரணமாக நீரில் மூழ்கும் என்று இந்திய விண்வெளி மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று மேலும் மேலும் அதிர்ச்சி அளித்தார் பூஜா குமார்