
காதலிக்க மறுத்ததால் தனியார் மருத்துவ கல்லூரி வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பகுதியைச் சேர்ந்தவர் அனுகிரகா. இவர் கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக மிதுன் சீனிவாசன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி வந்த நிலையில், மிதுன் சீனிவாசன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அனுகிரகாவிடம் கூறியுள்ளார். ஆனால், இதற்கு
அனுகிரகா மறுப்பு தெரிவித்துள்ளர்.
இந்த நிலையில் தன்னுடன் பழகி வரும் மிதுன் நடிகை புவனேஸ்வரியின் மகன் என்பது மாணவிக்கு தெரிய வந்துள்ளது. மேலும், இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு இருப்பதையும் அந்த பெண் அறிந்துள்ளார். தொந்தரவு கொடுத்த மிதுன் இதனை தொடர்ந்து மிதுன் சீனிவாசனுடனான பழக்கத்தை மாணவி முறித்துக் கொண்டதாக
சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மிதுன் சீனிவாசன், அனுகிரகாவின் வீட்டுக்கு சென்று பெட்ரோலை ஊற்றி கொன்று விடுவதாக மிரட்டியுள்ளாராம். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால், பயந்துபோன அனுகிரகாவின் குடும்பத்தார், திருமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார், மிதுன் சீனிவாசன் மீது கொலை மிரட்டல், ஆபத்தான பொருட்களை பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய வழக்குகளின்கீழ் பதிவு செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மிதுன், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.