சுதந்திர தின தேநீர் விருந்து.. புறக்கணித்த தமிழக முதல்வர்.. விருந்தையே ரத்து செய்த ஆளுநர் - என்னதான் ஆச்சு?

By Ansgar R  |  First Published Aug 14, 2023, 8:16 PM IST

நாளை ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய திருநாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனைஒட்டி நாளை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருந்தார்.


இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், ஆளுநர் மாளிகையிலும் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என். ரவி ஆளுநர் மாளிகையில் வழங்கவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இந்த தேநீர் விருந்து நடக்கும் மறுதேவி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தேனீர் ருந்தில் பங்கேற்க போவதில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

undefined

மூவர்ண கொடியேந்திய இளைஞரின் உருவம்.. சாக்பீசில் செதுக்கிய நேர்த்தி - இளம் சிற்பி அசத்தல்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் அரியலூர் அனிதா தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லாத பல மாணவச் செல்வங்களின் உயிர்களை நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். 

ஆனால் ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றி பேசுகிறார். இந்த நிலை மாறவே நீட் தேர்வுக்கு விளக்கு கோரி சட்டம் இயற்றிய தமிழ்நாடு அரசு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 

மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் இதற்கு ஒப்புதல் வழங்க கோரி மீண்டும் (14-8-2023) அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார். மேலும் இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஸ்திரத்தை கையில் எடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் - நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்

click me!