சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிப்பதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம்...!!!

 
Published : Jun 02, 2017, 09:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிப்பதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம்...!!!

சுருக்கம்

chennai silks demolision started

தி.நகரில் உள்ள தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன.

சென்னை திநகரிர் உஸ்மான் சாலையில் உள்ள பிரமாண்டமான ஜவுளி கடையான தி சென்னை சில்க்ஸில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  

மின்கசிவு காரணமாகதான் இந்த தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் முழு மூச்சுடன் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதை தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் முற்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் கட்டிடம் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் கட்டிடம் உறுதி தன்மை இழந்துள்ளதால் 3 நாட்களில் தரைமட்டமாகும் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் நேரில் சென்று கட்டிடம் இடிப்பதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து கட்டிடம் இடிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றனர். கட்டிடத்தின் அருகே கட்டிட கழிவுகளை நிரப்பி பின்னர் கட்டிடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!