காலங்காத்தால சென்னையில் ஜில்லுன்னு ஒரு மழை !!

By Selvanayagam PFirst Published Nov 20, 2019, 8:16 AM IST
Highlights

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதல் மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதே போல் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையும் இந்த ஆண்டு தொடர்ந்து 4 முறை நிரம்பியுள்ளது.

இந்நிலையில் வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மதன்படி சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சென்னை நகர்  பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பொழிவு இருந்தது.  சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

நங்கநல்லூர், அரும்பாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, சூளைமேடு, எம்.எம்.டி.ஏ. உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்தது. நங்கநல்லூர், அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகாலையிலேயே சென்னை ஜில்லுன்னு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!