சென்னையில் வெள்ளம் வர தான் செய்யும்..ஆனால்..! இப்படியெல்லாம் செய்து தடுக்கலாம்.. சொல்கிறார் ஐஐடி பேராசிரியர்..

Published : Mar 24, 2022, 05:51 PM IST
சென்னையில் வெள்ளம் வர தான் செய்யும்..ஆனால்..! இப்படியெல்லாம் செய்து தடுக்கலாம்.. சொல்கிறார் ஐஐடி பேராசிரியர்..

சுருக்கம்

சென்னை மாநகரில் வீடுகளை கட்டும் போது, தரைத்தளத்தில் தூண்களாக நிறுவி முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளாக கட்டாலம் என்றும் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் எனும் தரவுகளை சேகரித்து. அதற்கேற்றால் போல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.  

சென்னை மாநகரில் வீடுகளை கட்டும் போது, தரைத்தளத்தில் தூண்களாக நிறுவி முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளாக கட்டாலம் என்றும் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் எனும் தரவுகளை சேகரித்து. அதற்கேற்றால் போல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

உலக வானிலை தினத்தையொட்டி, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில், கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் பேசிய சென்னை ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், ” சென்னையை பொறுத்தவரை கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்துக்கும் குறைவாக அமைந்துள்ளது. இதனால் மழை காலங்களில், அதிகளவு மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படத்தான் செய்யும். எனவே, சாலை, குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கும் நாட்களைக் குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கலாம் என்று அவர் கூறினார்.

சென்னை மாநகரில் வீடுகளை கட்டும் போது, தரைத்தளத்தில் தூண்களாக நிறுவி முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளாக கட்டாலம் என்று தெரிவித்த அவர், மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் எனும் தரவுகளை சேகரித்து. அதற்கேற்றால் போல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார். 

சென்னை பெருநகரில் 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு முன்பு ஒரு மணி நேரத்துக்கு 31 மிமீ அளவு மழையை தாங்கும் வகையில் மழைநீர் வடிகால்களை மாநகராட்சி அமைத்தது. 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு, ஒரு மணி நேரத்தில் 68 மிமீ மழையைத் தாங்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. இப்போது அதை விட அதிக மழை பெய்தாலும் வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

முன்னதாக, காலநிலை ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் குறித்த இந்திய அளவிலான வானிலை வரைபடத் தொகுப்பை இணையவழியில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து தமிழக அளவிலான வரைபடத் தொகுப்பை வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புனே மண்டல விஞ்ஞானி பங்கேற்று, ‘பேரிடர் அபாயங்கள் தணிப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "அண்மைகாலமாக பருவநிலை மாற்றத்தால் மழைபெய்யும் நாட்கள், குறைந்த காலத்தில் அதிக மழைபொழிவு உள்ளிட்ட பல்வேறு இடர்கள் ஏற்படுகின்றன. மேலும் அதிகளவு மழைநீரை மண்ணால் வேகமாக உறிஞ்சிக் கொள்ள முடியவில்லை என்பதாலே வெள்ளம் ஏற்படுகிறது.இதனிடையே கொட்டித்தீர்க்கும் மழைநீர் அனைத்தும் நிலத்தடி நீராக மாறாததால், வரும் ஆண்டுகளில் வறட்சியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது" என்று பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!