சென்னை - குமரி 4 வழிச் சாலையின் நிலவரம் என்ன? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!!

Published : Mar 24, 2022, 05:45 PM IST
சென்னை - குமரி 4 வழிச் சாலையின் நிலவரம் என்ன? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!!

சுருக்கம்

சென்னை - கன்னியாகுமரி 4 வழிச் சாலை பணிகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்து விட்டதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

சென்னை - கன்னியாகுமரி 4 வழிச் சாலை பணிகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்து விட்டதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கன்னியாகுமரி - சென்னை இடையே 4 வழி சாலை மைப்பது தொடர்பாக கடந்த 2006இல் தொடங்கப்பட்ட  பணிகளுக்காக கன்னியாகுமரியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், அர்ப்பணிப்புடன் தங்களது நிலங்களை வழங்கிய நிலையில் தற்போது அந்த பணிகளும் முடிவடையவில்லை என்றும், சுமார் ரூ.20 கோடி வரை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக - கேரள எல்லையான வில்லுக்குறி - களியக்காவிளை சாலை மற்றும் நாகர்கோவில் - காவல்கிணறு இடையேயான சாலை என்று இரண்டு சாலைகளுக்கான பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் துறை சார்பில் சுமார் ரூ.850 கோடி செலவில் எல் அன் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதில் தற்போது 70 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது. எஞ்சிய இடங்களில் மலை பாதுகாப்பு மண்டலம் மற்றும் சுற்றுச்சூழலால் மரங்களுக்கு பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் கிரவல் மண் எடுக்க தடை விதித்துள்ளது.

இதனால் அருகாமையில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சாலை அமைப்பதற்கான கிரவல் மண், ஜல்லி ஆகியவற்றை சாலை அமைக்க கூடிய ஒப்பந்த நிறுவனமான எல் அன் டி நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எல் அன் டி நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் பணிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் முடிவடைந்து விடும். மேலும் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மண், ஜல்லி, மண் போன்றவற்றை எடுத்து சாலைகளை அமைப்பதன் மூலம் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், மறு டெண்டர் விடுமாறு தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்திடம் கேட்டுள்ளதாகவும் எ.வ.வேலு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் மாநில அரசின் சார்பில் நேரில் வலியுறுத்தியதாகவும் இதனை ஏற்றுக் கொண்ட மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக மறு டெண்டர் விடப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை