மெட்ரோ ரயிலில் இனி இந்த முறையிலும் டிக்கெட் வாங்கலாம்.! இன்று முதல் புதிய திட்டம் அறிமுகம் செய்த சென்னை மெட்ரோ

By Ajmal KhanFirst Published Jan 24, 2024, 3:21 PM IST
Highlights

மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 

சென்னை மெட்ரோ ரயில் - பயணச்சீட்டு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரும் உதவியாக மாறியுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு சென்று சேர முடிகிறது. இந்தநிலையில்  மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பயணச்சீட்டு வாங்கும் பயணிகள், மின்னணு பயணச்சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக கவுண்டர்களில் WhatsApp மூலம் OR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனதம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் இன்று (24.01.2024) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos

வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், கூறுகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை பெறுவதற்காகவும், காகித பயன்பாட்டைக் குறைத்து பசுமையான சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் QR பயணச்சீட்டுகளை பெறுதல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் QR பயணச்சீட்டுகளை Qg, WhatsApp, Paytm, PhonePe, QR UMF Game என பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைல் போனில் டிக்கெட்

இதன் தொடர்ச்சியாக மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை கோயம்பேடு மற்றும் விமான நிலையம் ஆகிய இரண்டு மெட்ரோ இரயில் நிலையங்களில் முதலில் முயற்சிக்கப்பட்டு, இது பயணிகளின் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில், பயணிகள் தங்கள் மொபைல் எண்ணை கவுண்டரில் உள்ளிடுவதற்கான வசதி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

பயணச்சீட்டுகளை பெறுவதற்கான வழிமுறைகள்

1. QR பயணச்சீட்டுகளுக்கு மெட்ரோ நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டரை அணுகவும். 

2. சேருமிடம் மற்றும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை குறித்து ஆபரேட்டரிடம் தெரிவிக்கவும்.

3. பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டரில் நிறுவப்பட்டுள்ள கீபேட் மூலம் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிடவும்.

4. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து உங்கள் WhatsApp-க்கு உங்கள் பயணச்சீட்டு விவரங்கள் அடங்கிய QR பயணச்சீட்டை பெறவும். 

இதையும் படியுங்கள்

TASMAC Liquor Price Hike: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மதுபான விலை உயருகிறது? எவ்வளவு தெரியுமா?

click me!