திமுகவினரின் லாபத்திற்காக கண்டுகொள்ளாமல் விடப்படும் அரசு மருத்துவமனைகள் - அண்ணாமலை ஆதங்கம்

By Velmurugan s  |  First Published Jan 24, 2024, 1:28 PM IST

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்காக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசும், துறை அமைச்சரும் தான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்ற நாளிதழ் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுக்கக் கூறிய மருத்துவர், மருத்துவமனையில் அதற்கான ஊழியர்கள் இல்லாததால், ஸ்கேன் செய்யாமலேயே சிகிச்சையைத் தொடர்ந்ததாகவும், தவறான சிகிச்சை காரணமாகவே சிறுவன் இறந்துள்ளார் எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

Latest Videos

ஐயா நான் ஏற்கனவே ஊதி போய் தான் இருக்கேன்; இனிமேலும் ஊத முடியாது - காவலரிடம் போதை ஆசாமி அலப்பறை

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் நிகழ்வது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால் திமுக அரசோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, ஒரு நாள் செய்திதானே என்று, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார்கள். 

அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் எளிய மக்கள் மீது திமுக காட்டும் புறக்கணிப்பு, பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல தனியார் மருத்துவமனைகளை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்காக, திமுக அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்

தங்கள் ஒரே மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு, ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பல மரணங்கள் ஏற்பட்டும், அரசு மருத்துவமனைகளின் பிரச்சினைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!