
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு திகில் அனுபவமாக இருக்கும். திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு ஏழரை நிமிடத்தில் வந்து சேர முடியும்.
முதற்கட்டமாக, 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கூடுதல் ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 2 முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் பெற்று கொண்டு செல்லலாம். நமக்கு தேவையான பட்சத்தில், அதனை செல்போன் போன்று தேவையான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
அதேபோல், கவுன்ட்டரில் ‘டோக்கன்’ வடிவிலான டிக்கெட் வாங்கி பயணம் செய்யலாம். உயர்மட்டப் பாதையில் இந்த 2 முறையும் டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சுரங்க ரயில் நிலையங்களில் ‘டோக்கன்’ வடிவிலான டிக்கெட் கிடைக்காது. நமக்கு தேவையான பயண அட்டையை பெற்று கொண்டு இருந்தால், மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சுரங்கத்தில் உள்ள 7 ரயில் நிலையங்களிலும் ரூ.10 கட்டணம் செலுத்தி பயண அட்டை பெற்று கொள்ளலாம்.