தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் மற்றும் பேருந்து மூலமாக நேற்று இரவு வரை சென்னையில் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியூருக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை- வெளியூருக்கு பயணம்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை தங்களது சொந்த ஊரில், உறவினர்களோடு கொண்டாடுவதே அணைவருக்கும் பிடித்தமான ஒன்று. வேலை நிமித்தமான சென்னைக்கு வந்தவர்கள் விஷேச நாட்களில் தான் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள் அந்த வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பேருந்துகள், ரயில்களில் லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி அடுத்த நாளும் தமிழக அரசு சார்பாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
16 லட்சம் பேர் பயணம்
இதனால் தொடர் 3 நாட்கள் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு பயணம் செய்ய சென்னைவாசிகள் முடிவு செய்தனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ரயில்கள் மூலம் சென்னையில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2100 பேருந்துகளும், 1814 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த (09.11.2023 முதல் 11.11.2023) நேற்று நள்ளிரவு 12 மணி வரையில் மொத்தம் 10,570 பேருந்துகளில் 5,66,212 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக லட்சக்கணக்கோனார் வெளியூர் சென்றுள்ளதால் பரபரப்பாக காணப்படும் சென்னை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படியுங்கள்