Chennai IIT : வெளியானது உயர்கல்வி நிறுவன தரவரிசை பட்டியல்... முதலிடத்தில் சென்னை ஐஐடி!!

By Narendran SFirst Published Dec 29, 2021, 4:30 PM IST
Highlights

இந்தியாவின் மிகுந்த புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி 3வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

இந்தியாவின் மிகுந்த புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி 3வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016 முதல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஒட்டுமொத்தமாக சிறந்தகல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் இடம் பிடித்துள்ளது. சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக்காக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக பெங்களூரு ஐஐஎஸ்சி 2வது இடத்திலும் மும்பை ஐஐடி 3வது இடத்திலும் உள்ளது.  முதல் 100 இடங்களில் அமிர்தாவிஷ்வ வித்யாபீடம் (12), வேலூர்விஐடி (21), பாரதியார் பல்கலைக்கழகம் (22), திருச்சி என்ஐடி (23),அண்ணா பல்கலை. (25), சென்னைபல்கலை. (47), அழகப்பா பல்கலை. (57), மதுரை காமராஜர் பல்கலை. (83), பாரதிதாசன் பல்கலை. (90) உள்ளிட்ட 19 தமிழக கல்வி நிறுவனங்கள் உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசையில் 2018-ம் ஆண்டு10-வது இடத்தில் இருந்தது. பின்னர்2019-ல் 14-வது இடம், 2020-ல்20-வது இடம் என பின்தங்கி, தற்போது 25வது இடம்பிடித்து பின்னடைவை சந்தித்துள்ளது. பொறியியல் பிரிவிலும் 14-வதுஇடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. இந்த பிரிவில் முதல் 200 இடங்களில் 33 தமிழகக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மருத்துவப் பிரிவில் முதல் இடத்தை டெல்லி எய்ம்ஸ், 3-வது இடத்தை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் (சிஎம்சி) மீண்டும் தக்கவைத்துள்ளன. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 16-வது இடத்துக்கும் (கடந்த ஆண்டு 12), அண்ணாமலை பல்கலைக்கழகம் 35-வது இடத்தில் இருந்து 40-வது இடத்துக்கும் பின்தங்கியுள்ளன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்முறையாக பட்டியலில் 48-வது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிக்கான பிரிவில் முதல் இடத்தை டெல்லியில் உள்ளமிராண்டா ஹவுஸ் பிடித்துள்ளது.

முதல் 100 இடத்தில் லயோலா (3),மாநில கல்லூரி (7), கோவைஅரசு கலைக் கல்லூரி (42), திருப்பூர் அரசு கலைக் கல்லூரி (98)உள்ளிட்ட 33 தமிழக கல்லூரிகள் உள்ளன. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.nirfindia.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1,438 உயர் கல்வி நிறுவனங்கள் ARIIA தரவரிசை பட்டியலுக்கு விண்ணப்பித்திருந்தன என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 2வது இடம் பிடித்துள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து ரூ.100 கோடி அளவிற்கு நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று  பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

click me!