சென்னை ஐஐடி புது இயக்குனர் பொறுப்பேற்பு.. பல்வேறு விருதுகளை பெற்ற பேராசிரியர் காமகோடி நியமனம்..

By Thanalakshmi VFirst Published Jan 17, 2022, 5:04 PM IST
Highlights

சென்னை ஐஐடியின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை ஐஐடியில் இயக்குநராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அப்பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில் சென்னை ஐஐடியின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டார். இதே போன்று டெல்லி ஐஐடி இயக்குனராக மும்பை ஐஐடி பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐஐடி இயக்குனராக கான்பூர் ஐஐடி பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது சென்னை ஐஐடியின் 11வது  இயக்குனராக பேராசிரியர் காமகோடி பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கை நோக்கத்தின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை அதிகரிப்பதே தம்முடைய உடனடி குறிக்கோள் என்றார். இவர் சென்னை ஐஐடியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றி வந்தவர்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சக்தி' மைக்ரோபிராசஸரை வடிவமைத்த வி. காமகோடி சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சக்தி என்ற நுண்செயலியை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் காமகோடி. பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் காமகோடி மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திலும் உறுப்பினராக உள்ளார். காமகோடியின் சேவை மூலமாக சென்னை ஐஐடியும் நாடும் பெருமளவு பயன்பெறும் என தற்போதைய இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

click me!