முறிந்து விழுந்த மரங்கள்.. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு - எப்போதும் திரும்ப வரும்? அமைச்சர் தந்த அப்டேட்!

By Ansgar RFirst Published Dec 4, 2023, 2:25 PM IST
Highlights

Chennai Power Cut : சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்த முக்கிய தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நல்ல மழை நேற்று முதல் வெளுத்து வாங்கி வருகின்றது, இந்நிலையில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், "புயல் காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் வழங்குவோம். 2.5 கோடி பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளோம்" என்றார்.

இதுஒருபுரம் இருக்க சென்னையின் அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அருகே, சாஸ்திரி பவன்- ஹாடோஸ் சாலை, ஆயிரம் விளக்கு - காதர் நவாஸ்கான் சாலை, கிரீம்ஸ் சாலை, லயோலா கல்லூரி- லிபா கேட், எழும்பூர் போலீஸ் மருத்துவமனை அருகே, தி.நகர் - கமலாலயம் அருகே, கீழ்ப்பாக்கம் புதிய ஆவடி சாலை, ஆகிய இடங்களில் பல மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, இதனால் சென்னையில் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos

சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள்; கூடுதல் மீட்பு குழுக்கள் வேண்டும் - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை 

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மற்றும் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் சேதங்களை நிவர்த்தி செய்யும் விதத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மேலும் சீரமைப்பு பணிகள் துரிதமாகவும், வேகமாகவும் நடந்து வருவதால் விரைவில் தேவையான பணிகள் முடிக்கப்பட்டு மின் இணைப்பு அதிவிரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

மிக்ஜாம் புயலின் அடுத்த டார்கெட் திருவள்ளூர்... அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்

மின் விநியோகத்தை மக்களுக்கு விரைந்து கொடுத்திட கூடுதல் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோல மருத்துவமனைகளுக்கு தொடர்ச்சியாக மின் வினியோகம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கனமழை காரணமாக மின்சார ரீதியாக எந்த விதமான இறப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்கின்ற முனைப்பில் தமிழக அரசு செயல் பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!