மிக்ஜாம் புயலின் அடுத்த டார்கெட் திருவள்ளூர்... அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்

By Ganesh A  |  First Published Dec 4, 2023, 1:57 PM IST

மிக்ஜாம் புயல் படிப்படியாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் கொடுத்துள்ளது.


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெருமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருமளவு சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளதாலும், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் போக்குவரத்தும் தடை பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் ஆந்திராவில் தான் கரையை கடக்க உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நெல்லூருக்கும் முசிலிபட்டினத்திற்கும் இடையே இப்புயல் நாளை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 90 கிமீ தொலைவில் இருக்கும் இந்த புயல் படிப்படியாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதால், சென்னையில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி உள்ளன.

Latest Videos

undefined

மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. ஏற்கனவே அம்மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ள நிலையில், தற்போது ரெட் அலர்ட் கொடுத்துள்ளதால் அதி கனமழை தொடர வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை தொடரும் என தெரியவந்துள்ளதால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ரூட்டை மாற்றிய மிக்ஜாம் புயல்... சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை ஆர்வலர்

click me!