Dhanush : இந்தியாவில் முதல் முறையாக, அதுவும் சென்னையில் பார்முலா 4 கார் ரேசிங் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
சென்னையில் இரண்டு நாள் திருவிழாவாக ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் மற்றும் இந்திய ரேசிங் ஃபெஸ்டிவல் நடைபெறவுள்ளது. இதுவே இந்தியாவின் முதல் நைட் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு, பயிற்சி ஓட்டத்துடன் துவங்கும் இந்த போட்டிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படவுள்ளது.
சுமார் 3.5 கிமீ நீளமுள்ள இந்த பந்தயப் பாதை, இந்தியா மற்றும் தெற்காசியாவிலேயே மிக நீளமான Street Circuit என்பது பலர் அறியாத உண்மை. சென்னையின் முக்கியான சாலைகளான தீவு மைதானம், நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக செல்கிறது என்று தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் (SDAT) அறிவிப்பு. அமைப்பாளர்கள் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
undefined
சிறகடிக்க ஆசையை அடித்து பறக்கவிட்ட சன் டிவி தொடர்கள்! இந்த வார டாப் 10 TRP லிஸ்ட் இதோ!
பந்தயங்களுக்கான தகுதிச் சுற்றுகள் - JKFLGB F4, F4 India, IRL Driver A மற்றும் IRL Driver B - மாலை 6.30 மணிக்குப் பிறகு நடைபெறும் மற்றும் இரவு 9 மணி வரை நடைபாதை மூடப்படும் என்று நிகழ்வுகளுக்கான அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான பந்தயங்கள் செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை மாலை 3.55 மணி முதல் இரவு 10.45 மணி வரை நடைபெறும். JKFLGB பந்தயம் 1ல் தொடங்கி, F4 இந்தியா ரேஸ் 2, IRL ரேஸ் 1, FLGB 4 ரேஸ் 2 மற்றும் IRL ரேஸ் 2 என பந்தயங்கள் வரிசையாக நடைபெறும்.
Congratulations bro on India’s first On Street Night F4 Championship and Indian Racing League. This pathbreaking sporting initiative will elevate Chennai’s stature as India’s destination for marquee sports events 💥💥
— Dhanush (@dhanushkraja)தமிழக அரசின் இந்த முன்னெடுப்புக்கு திரைத்துறையில் இருந்தும் சில எதிர்ப்புகள் எழுந்தாலும், பல நடிகர்கள் இந்த ஸ்ட்ரீட் ரேஸிங் பந்தயத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் இப்பொது வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் "இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் எஃப்4 சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் இப்பொது நடைபெறவுள்ளது. இந்த செயல் சென்னையின் அந்தஸ்தை இன்னும் உயர்த்தும்.. வாழ்த்துக்கள் ப்ரோ" என்று கூறியுள்ளார்.
தளபதியோடு பார்ட்டி பண்ண ரெடியா? GOAT பட நான்காம் சிங்கிள் அப்டேட் இதோ!