சென்னையில்  மின்சார ரயில்ல போறவரா நீங்க ? நாளைக்கு பல ரயில்கள் ரத்து … எது எது ?  என்று பாருங்கள் !!

 
Published : Jul 14, 2018, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
சென்னையில்  மின்சார ரயில்ல போறவரா  நீங்க ? நாளைக்கு பல ரயில்கள் ரத்து … எது எது ?  என்று பாருங்கள் !!

சுருக்கம்

chennai electric train cancel tommorrow thambaram - Beach station

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் நாளை பல  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் மின்சார ரயிலில் பயணம் செய்கிறார்கள். வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மின்சார ரயில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது.

இந்நிலையில் தாம்பரம் – கடற்கரை சாலை இடையே நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக  ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடற்கரை-தாம்பரம் காலை 9.12, 9.25, 9.42, 10, 10.20, 10.40, 10.45, 10.50, 11.10, 11.20, 11.40, 11.50, 12.10, 12.20, 12.40, 12.50 மணி மின்சார ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்களும் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 10.10 மணி ரெயிலும், கடற்கரை-செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி ரெயில்களும், செங்கல்பட்டு-கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

கடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில், திருமால்பூர்-கடற்கரை காலை 8, 10.25 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


PREV
click me!

Recommended Stories

டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Tamil News Live today 25 December 2025: வெற்றிமாறனின் சிஷ்யன் இயக்கிய படம்... சிறை சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ